states

img

ஜம்மு-காஷ்மீரில் நாளை 2-ஆம் கட்ட பேரவைத் தேர்தல்

ஜம்மு-காஷ்மீரில் நாளை 2-ஆம் கட்ட பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல்கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 23 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த இத்தேர்தலில் 61.38 சதவிகித வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், ஜம்மு பகுதியில் உள்ள ரியாசி, ரஜெளரி, பூஞ்ச், காஷ்மீர் பகுதியில் உள்ள ஸ்ரீநகர், கந்தர்பால் ஆகிய 6 மாவட்டங்களின் 26 தொகுதிகளில் புதன்கிழமை 2-ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் மொத்தம் 239 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்கள் சுமார் 15,500 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.அவர்களுக்காக ஜம்மு, உதம்பூர், தில்லியில் 25 சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்.1ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்.8இல் நடைபெறுகிறது.